பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு..!

340

டீசல் விலை இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்து உச்சத்தை தொட்டதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

சர்வதேச பொருளதார சந்தைகளில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிப்பதாலும், கச்சா எண்ணெய்யின் விலை அதிகரிப்பதாலும், எரிபொருள்களின் விலை தொடர்ந்து மாற்றம் கண்டு வருகிறது. மேலும் ஈரானில் உற்பத்தி ஆகும் கச்சா எண்ணெய்யின் உற்பத்தி 40 சதவீதம் முடங்கியதால், சந்தைகளில் அவற்றின் தேவை அதிகரித்துள்ளது.

இதனால், டீசல் விலை இதுவரை இல்லாத அளவிற்கு விலை உயர்வை சந்தித்து வருகிறது. நேற்றைய விலையிலிருந்து 15 காசுகள் அதிகரித்து டீசல் லிட்டருக்கு 73 ரூபாய் 69 காசுகளுக்கு விற்பனையாகிறது. பெட்ரோல் விலை 13 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு 81 ரூபாய் 22 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.