எரிபொருட்களுக்கான வரியை உயர்த்தி அதிபர் உத்தரவு..!

366

பெரு நாட்டில் எரிபொருட்களுக்கான வரி உயர்வை கண்டித்து பேரணியில் ஈடுபட்ட, போராட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே மோதல் வெடித்தது.

பெரு நாட்டு அதிபர் மார்டின் விஸ்கரா ( Vizcarra), பெட்ரால் உள்ளிட்ட எரிபொருட்களுக்கான வரியை உயர்த்தி உத்தரவிட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பெரும் போராட்டம் வெடித்துள்ளது. லாரி மற்றும் பேருந்து ஓட்டுனர்கள் வேலைநிறுத்ததில் ஈடுபட்டுள்ளனர். தலைநகர் லிமாவில் அதிபரை கண்டித்து நடைபெற்ற பேரணியில் வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்களை காவல்துறையினர் தடுக்க முயன்றதால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி அவர்களை கலைத்தனர். இதனால் அந்த இடமே போர்க்களம் போல் காட்சியளித்தது.