பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு எதிரொலியாக காய்கறி விலை அதிகரிப்பு..!

343

பெட்ரோல், டீசல் விலை உயர்வு எதிரொலியாக காய்கறி விலை கிடு கிடுவென அதிகரித்து வருகிறது.

தமிழ்நாட்டில் மதுரை, ஒட்டன்சத்திரம், கோவை, நீலகிரி பகுதிகளில் இருந்து காய்கறிகள் கோயம்பேடு சந்தைக்கு வருகின்றன. ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மராட்டிய மாநிலங்களில் இருந்தும் சென்னைக்கு காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன. டீசல் விலை தினந்தோறும் அதிகரித்து வருவதால், அதற்கு ஏற்ப லாரி வாடகையும் உயர்த்தப்பட்டுள்ளது. எரி பொருட்கள் விலை அதிகரிப்பால், காய்கறிகளின் விலை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. இதனால், சாமான்ய மக்கள் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.