அனுமதி பெற்றுதான் குரங்கணி காட்டுப்பகுதிக்கு டிரக்கிங் சென்றோம் – டிரக்கிங் கிளப் உரிமையாளர் பீட்டர் விளக்கம் ..!

372

வனத்துறையிடம் உரிய அனுமதி பெற்று தான் டிரக்கிங் சென்றதாக டிரக்கிங் கிளப் உரிமையாளர் பீட்டர் விளக்கமளித்துள்ளார்.
சென்னை பாலவாக்கத்தில் வெளிநாட்டை சேர்ந்த பீட்டர் என்பவர் மலையேறும் டிரக்கிங் கிளப் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிறுவனம் குரங்கணி மலைப்பகுதிக்கு அனுமதியின்றி ஐ.டி ஊழியர்களை அழைத்துச் சென்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், உரிய அனுமதி பெற்றுதான் குரங்கணி காட்டுப்பகுதிக்கு டிரக்கிங் சென்றதாக பீட்டர் விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள அவர், குரங்கணி காட்டுப்பகுதிக்கு சென்றபோது காட்டுத் தீக்கான அறிகுறிகள் எதுவும் கிடையாது என்றும், அனுபவம் மிக்க வழிகாட்டிகள் தான் மலையேற்ற பயிற்சிக்கு சென்றவர்கள் எனவும் கூறியுள்ளார். 11-ம் தேதி மலையில் இருந்து கீழே இறங்கிய போதுதான் விவசாயிகள் தீ வைத்ததாக பீட்டர் குற்றம்சாட்டியுள்ளார்.