ஜல்லிக்கட்டுக்காக மீண்டும் மல்லுக்கட்டும் பீட்டா உச்சநீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு !

254

தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகள் அதிகளவில் துன்புறுத்தப்பட்டதற்கான ஆதாரங்களை திரட்டி அதனை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய இருப்பதாக பீட்டா அமைப்பு தெரிவித்துள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டிக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து, தமிழகத்தில் தன்னெழுச்சி போராட்டங்கள் நடைபெற்றன. இதையடுத்து, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு, தமிழக சட்டசபையில் அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதனால் ஏற்பட்ட எழுச்சியால் தமிழகமெங்கும் நூற்றுக்கணக்கான இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பீட்டா இந்தியா அமைப்பின் தலைவரான பூர்வா ஜோஷிபுரா, சமீபத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில், காளைகள் துன்புறுத்தப்பட்டதற்கான ஆதாரங்களை சேகரித்து, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு போட்டி நடத்த சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவுள்ளதாகவும் பீட்டா அமைப்பின் விலங்குகள் நல விவகார இயக்குனர் மணிலால் வல்லியதே தெரிவித்துள்ளார்.