பெரு நாட்டின் பாமல்கா பகுதியில் அகழ்வாராய்ச்சி நடைபெற்று வந்த இடத்தில் தீவிபத்து!

211

பெரு நாட்டின் பாமல்கா பகுதியில் அகழ்வாராய்ச்சி நடைபெற்று வந்த இடத்தில் தீவிபத்து ஏற்பட்டது.
பாமல்கா என்ற பகுதியில் உள்ள லம்பாயேக் பள்ளத்தாக்கில் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான சித்திரங்கள் குறித்து தொல்லியல் துறையினர் ஆராய்ச்சி நடத்தி வந்தனர். இந்நிலையில் அருகில் உள்ள கரும்புத் தோட்டத்தில் எரிக்கப்பட்ட தீ பரவியதில் அகழ்வாராய்ச்சிப் பகுதியில் போடப்பட்டிருந்த பந்தல்கள் மற்றும் கட்டுமானங்கள் தீக்கிரையாகின. மேலும் ஆராய்ச்சிக்குப் பயன்படுத்திய உபகரணங்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் நெருப்பில் சேதமடைந்தன.