ரத்தம் சிந்தும் விலங்கின விளையாட்டுக்குத் தடை கோரி பேரணி

107

பெருவில் விலங்குகைளை துன்புறுத்தும் விளையாட்டு போட்டிக்கு தடை விதிக்க வேண்டும் என விலங்கின ஆர்வலர்கள் ஏராளமானோர் கண்டன பேரணி நடத்தினர்.

பெரு தலைநகர் லிமா மற்றும் கோஸ்டா சிரியா, (Costa sierra)மற்றும் சில்வா (Selva) உள்ளிட்ட நகரங்களில் காளைச் சண்டை மற்றும் கோழிச் சண்டைகள் நடைபெற்று வருகிறது. இதனால் காளைகள் மற்றும் கோழிகள் துன்பப்படுத்தப்படுவதாகவும் அதனை தடுத்த நிறுத்த வேண்டும் என விலங்கின ஆர்வலர்கள் நீதிமன்றத்தை நோக்கி பேரணியாக சென்றனர். பேரணியாக சென்றவர்கள மாறுவேடங்களில் உடையணிந்து தனது எதிர்ப்பை தெரிவித்தனர். பெரு அரசு, இரத்தம் சிந்தும் இது போன்ற விளையாட்டுக்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.