பெருவில் நடைபெற்ற காளை விரட்டும் போட்டியில் பார்வையாளர்களை எருதுகள் முட்டித் தள்ளியதால் பரபரப்பு ஏற்பட்டது.

216

பெருவில் நடைபெற்ற காளை விரட்டும் போட்டியில் பார்வையாளர்களை எருதுகள் முட்டித் தள்ளியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தென் அமெரிக்க நாடான பெருவில் உள்ள அயாகுசோ நகரில் ஆண்டுதோறும், புனிதர் அனாவின் நினைவாக காளைகளை விரட்டும் போட்டி நடைபெறுகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான போட்டியில், பொதுமக்கள் விரட்டியதால், சீறிப் பாய்ந்த காளைகள், வீரர்களை தாக்கியதோடு பார்வையாளர்களையும் முட்டித்தள்ளின. இதனால் ஏற்பட்ட சலசலப்பில் சிதறி ஓடி கீழே விழுந்த சிலரை, காளைகள் கொம்புகளால் குத்தின. இதில் பலர் காயமடைந்தனர்