புதுக்கோட்டை அருகே பெரியார் சிலையின் தலைப்பகுதி சேதப்படுத்தப்பட்டுள்ளதால் பரபரப்பு ..!

395

புதுக்கோட்டை அருகே பெரியார் சிலை உடைக்கப்பட்டதை அடுத்து, பதற்றம் ஏற்பட்டுள்ளதால், அசம்பாவிதங்களை தவிர்க்க, அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள புதுக்கோட்டை விடுதி கிராமத்தில் பெரியார் சிலை அமைந்துள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணியால் இந்த சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று இரவு மர்மநபர்கள் சிலரால், பெரியார் சிலையின் தலைப்பகுதி சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, பெரியார் சிலையை உடைத்தவர்களை கண்டுபிடிக்க வலியுறுத்தி, திராவிடர் கழகம் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள், பொதுமக்களுடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அசம்பாவிதங்களை தவிர்க்க, அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.