அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டு அறிக்கையில் எச்.ராஜாவுக்கு கண்டனம்..!

388

தந்தை பெரியாரை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ள எச்.ராஜாவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இதுதொடர்பாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,எச்.ராஜாவின் கருத்து பெரியாரை அவமதிக்கும் வகையில் இருந்ததால் ஒட்டுமொத்த தமிழகத்தையும் கொந்தளிக்க வைத்துவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.மூட நம்பிக்கைக்கு எதிராகவும், தாழ்த்தப்பட்ட மக்களுக்காகவும் தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர் பெரியார் என்றும்,
பெரியார் பிறந்திருக்கவில்லை என்றால் தமிழ் இனம் தலை நிமிர்ந்து வாழ்ந்திருக்க முடியாது எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.தவறாக கருத்து பதிவிடப்பட்டுள்ளதாக எச்.ராஜா வருத்தம் கேட்டபோதும், தமிழக மக்களின் மனம் புண்பட்டுள்ளதாகவும்,தந்தை பெரியாரை அவமதிக்கும் எந்த செயல்களையும் அ.தி.மு.க. ஏற்க தயராக இல்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அ.தி.மு.க. எனும் வீரிய விருட்சத்திற்குள் பெரியாரும் இருக்கிறார் என்பதை யாரும் மறந்திட வேண்டாம் என குறிப்பிட்டுள்ள அவர்கள்,தமிழகத்தில் எப்படியாவது குழப்பத்தை விளைவித்து, குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைப்பவர்களின் எண்ணம் பலிக்காது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.