பென்னிகுவிக் வாரிசுகள் 120 ஆண்டுகளுக்குப் பின் அணையைப் பார்வையிட்டு தமிழக மக்களுக்கு நன்றி தெரிவிப்பு..!

471

முல்லை பெரியாறு அணை கட்டிய ஜான் பென்னிகுவிக் வாரிசுகள் தேனி மாவட்டத்திலுள்ள அவரது மணிமண்டபத்தை பார்வையிட்டு மகிழ்ந்தனர்.
தேனி, திண்டுக்கல், மதுரை. சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களின் நீர் ஆதாரமாக விளங்கும் முல்லை பெரியாறு அணை கர்ணல் ஜான் பென்னி குவிக் அவர்களால் 1895 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்நிலையில் 120 ஆண்டுகளுக்குப் பின்னர் அவரது பிறந்த நாளை முன்னிட்டு அவரது வாரிசான டயானா ஜீப், தனது தாத்தா பென்னிகுவிக் கட்டிய அணையை பார்வையிட்டனர். இதனையடுத்து லோயர் கேம்பில் உள்ள அவரது மணிமண்டபத்திற்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த டயானா, தனது தாத்தாவிற்கு தமிழக மக்கள் தரும் மரியாதையைப் பார்த்து தான் பெருமைப் படுவதாகத் தெரிவித்தார்.