டோக்கியோவில் பேரிடர் மீட்பு பயிற்சி 100க்கும் மேற்பட்டவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு !

260

டோக்கியோவில் நடத்தப்பட்ட பேரிடர் மீட்பு பயிற்சி வகுப்பில் 100க்கும் மேற்பட்டவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், கடந்த 2011ஆம் ஆண்டு நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட புகுஷிமா அணுமின் நிலையைத்தின் நினைவு தினத்தையொட்டி, பேரிடர் மீட்பு பயிற்சிகள் நடத்தப்பட்டது. உள்ளூர் தீயணைப்பு வீரர்களால் நடத்தப்பட்ட இந்த பயிற்சி வகுப்பில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். பேரிடரால் பாதிக்கப்பட்ட இடங்களில் சிக்கிக் கொண்டவர்களை மீட்டு, முதலுதவி கொடுக்கப்படுவது போன்ற பயிற்சிகள் நடத்தப்பட்டன. மேலும் ஏராளமான தீயணைக்கும் கருவிகளை கொண்டு தீவிபத்தை அணைகும் பயிற்சிகளும் நடைபெற்றது.