பேரறிவாளனை பரோலில் விடுவித்த தமிழக அரசு முதலமைச்சருக்கு எம்எல்ஏக்கள் தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி நன்றி

297

பேரறிவாளனை பரோலில் விடுவித்த தமிழக அரசுக்கு அதிமுக எம்எல்ஏக்கள் தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி நன்றி தெரிவித்தனர்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அதிமுக எம்எல்ஏக்கள் தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகியோர் நன்றி தெரிவித்தனர். பரோல் வழங்க நடவடிக்கை எடுத்த முதல்வர், நிரந்தரமாக விடுவிக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.