பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பாக விரைவில் நல்ல முடிவு வரும் என்று சட்டத்துறை அமைச்சர்…..

218

பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பாக விரைவில் நல்ல முடிவு வரும் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் உறுதியளித்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலையில் குற்றம் சுமத்தப்பட்டு பேரறிவாளன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை பரோலில் விடுவிக்க வலியுறுத்தி அவரது தாயார் அற்புதம்மாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தை நேரில் சந்தித்து மனுக் கொடுத்தார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், பேரறிவாளனை விரைவாக பரோலில் விடுவிக்க வேண்டும் என்று அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த அமைச்சர் சி.வி.சண்முகம், முதலமைச்சர் ஏற்கனவே கூறியதுபோல், அரசு தலைமை வழக்கறிஞருடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். இதுகுறித்து விரைவில் நல்ல முடிவு வரும் என்றும் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.