பேரறிவாளனின் பரோலை நீட்டிக்க நடிகர் சத்யராஜ் கோரிக்கை.

275

பேரறிவாளனின் பரோலை நீட்டிக்க வேண்டும் என்று நடிகர் சத்யராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் பேரறிவாளனை நடிகர் சத்யராஜ் நேரில் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், பேரறிவாளனுக்கு பரோல் வழங்க நடவடிக்கை எடுத்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். அவரது தந்தை குயில்தாசனின் உடல் நிலையை கருத்தில் கொண்டு பரோலை நீட்டிக்க வேண்டும் என்று சத்யராஜ் கேட்டுக் கொண்டார்.