பேரறிவாளன் தந்தை உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி!

206

பேரறிவாளனின் தந்தை உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ராஜீவ் காந்தி கொலையாளி பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் சில தினங்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து பேரறிவாளன் பரோல் கேட்டு மனு தாக்கல் செய்ததையடுத்து, அவருக்கு 1 மாதம் பரோல் வழங்கப்பட்டது. தொடர்ந்து அவரது தந்தையின் உடல்நிலை காரணாமாக மீண்டும் 1 மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரத்த ஓட்டத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும், அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவரது குடும்பத்தினர் தகவல் தெரிவித்தனர்.