பேரறிவாளன் பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு!

262

பேரறிவாளன் பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு தமிழக அரசு ஒரு மாதம் பரோல் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து அவர் ஆகஸ்ட் மாதம் 25-ந் தேதி வேலூர் மத்திய சிறையில் இருந்து வெளியே வந்தார். ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் இருந்த பேரறிவாளனை அரசியல் கட்சியினர், சினிமா துறையினர், சமூக ஆர்வலர்கள் சந்தித்து பேசினர்.இந்நிலையில் பேரறிவாளனுக்கு வழங்கப்பட்டுள்ள பரோலை நீடிக்க வேண்டும் என அவரது தாய் அற்புதம்மாள், தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோல் நாளை முடிவடையும் நிலையில், அவருக்கு மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சரின் இந்த அறிவிப்பால் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் மகிழ்ச்சியடைந்துள்ளார்.