வழிப்பறி கொள்ளையர்களை தனியொருவராக விரட்டிப்பிடித்த காவலருக்கு பாராட்டு..!

259

பெரம்பூர் அருகே வழிப்பறி கொள்ளையர்களை தனியொருவராக விரட்டிப்பிடித்த காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

சென்னை பெரம்பூர் செம்பியம் காவல் நிலையத்தில் நுண்ணறிவு காவலராக பணிப்புரிந்து வருபவர், சிவலிங்கம். இவர் காவல் நிலையத்திற்கு செல்லும் வழியில், இரண்டு இளைஞர்கள் இருச்சக்கர வாகனத்தில் அதி வேகமாக சென்றனர். அப்போது சந்தேகம் அடைந்த அவர், செம்பியம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துவிட்டு, அந்த இளைஞர்களை பின் தொடர்ந்தார். ஒரு கிலோ மீட்டர் தூரம் விரட்டி சென்ற சிவலிங்கம், இளைஞர்களில் ஒருவரை மடக்கி பிடித்தார்.

அப்போது இளைஞர்கள் சிவலிங்கத்தை தாக்கினர். இந்தநிலையில் அங்கு வந்த செம்பியம் போலீசார் மற்றொருவரையும் மடக்கிப் பிடித்தனர். இதைத்தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், அவர்கள் கொடுங்கையூரை சேர்ந்த, பரத்ராஜ் மற்றும் அஜீத் என்பதும் தெரியவந்தது. காயம் அடைந்த காவலர் சிவலிங்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தனியொருவராக கொள்ளையர்களை விரட்டிப்பிடித்த காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.