பெரம்பலூர் அருகே வீட்டினுள் புகுந்த மர்மநபர்கள் 30 சவரன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

246

பெரம்பலூர் அருகே வீட்டினுள் புகுந்த மர்மநபர்கள் 30 சவரன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
பெரம்பலூர் அருகே நமையூர் கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசி. இவரது கணவர் ஆசைத்தம்பி வெளிநாட்டில் பணிபுரிந்துவரும் நிலையில், தமிழரசி தனது உறவினர்களுடன் இங்கு வசித்து வருகிறார். இந்த நிலையில், வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தமிழரசி, நள்ளிரவில் கண்விழித்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அத்துடன், பீரோவில் இருந்து 30 சவரன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் பணம் கொள்ளைப்போனது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, தகவலின்பேரில் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தடயங்களை சேகரித்தனர். இது குறித்து, மங்களமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவில் ஆட்கள் வீட்டில் இருக்கும்போதே அரங்கேறிய இந்த கொள்ளை சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.