பெப்சி, கோக் உள்ளிட்ட குளிர்பான நிறுவனங்கள் தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்க தடை விதிக்கக் கோரி தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

304

பெப்சி, கோக் உள்ளிட்ட குளிர்பான நிறுவனங்கள் தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்க தடை விதிக்கக் கோரி தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் தொழிற் பேட்டையில் பெப்சி, கோலா குளிர்பானங்கள் தயாரிக்கும் ஆலைகள் உள்ளிட்ட 25 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளுக்கு குளிர்பானம் தயாரிக்க தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதால், குளிர்பான ஆலைகளுக்கு தாமிரபரணியில் இருந்து தண்ணீர் எடுக்க தடை விதிக்கக்கோரி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ராகவன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.