பெப்சி மற்றும் கோக் உள்ளிட்ட அயல்நாட்டு குளிர்பானங்களை தடை செய்ய வலியுறுத்தி, சென்னையில் வணிகர் சங்க பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம்

206

பெப்சி மற்றும் கோக் உள்ளிட்ட அயல்நாட்டு குளிர்பானங்களை தடை செய்ய வலியுறுத்தி, சென்னையில் வணிகர் சங்க பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அதன் தலைவர் வெள்ளையன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, பெப்சி மற்றும் கோக் உள்ளிட்ட அயல்நாட்டு குளிர்பானங்களை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளையன், அமேசான் நிறுவனத்தால் உள்நாட்டு பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்நிறுவனத்தை தடை செய்ய மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டார்.