மக்கள் விரோதப்போக்கை கடைபிடித்தால் அதிமுக ஆட்சி நீடிக்காது என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

344

மக்கள் விரோதப்போக்கை கடைபிடித்தால் அதிமுக ஆட்சி நீடிக்காது என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்ளாட்சி தேர்தல் எப்போது வந்தாலும் அதனை சந்திக்க தயாராக இருப்பதாக கூறினார். உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என தெரிவித்த அவர், அதிமுகவை பாஜக இயக்குவதாக மு.க.ஸ்டாலின் கூறுவது அடிப்படை ஆதாரமற்றது என காட்டமாக கூறினார். குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை அதிமுக நிர்வாகிகள் தான் கூற வேண்டும் என தெரிவித்த தமிழிசை, மக்கள் விரோதப்போக்கை கடைபிடித்தால் தமிழகத்தில் அதிமுக ஆட்சி நிலைக்காது என கூறினார்.