கைலாஷ் யாத்திரை மேற்கொண்ட தமிழக பக்தர்கள் உள்பட பலர் சிக்கி தவிப்பு..!

182

நேபாளத்தில் கைலாஷ் யாத்திரை மேற்கொண்ட தமிழகத்தை சேர்ந்தவர்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கனமழை மற்றும் மோசமான வானிலையால் அங்கு சிக்கி தவித்து வருகின்றனர்.

நேபாளத்தில் இந்துக்கள் புனித தலமாக கருதும் கைலாஷ் மானசரோவர் பகுதி அமைந்துள்ளது. இங்கு குறிப்பிட்ட சில மாதங்களுக்கு பக்தர்கள் யாத்திரையை மேற்கொள்வது வழக்கம். இந்நிலையில் இந்தாண்டுக்கான யாத்திரை தொடங்கியதால், நாடு முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் அங்கு சென்றிருந்தனர். இதனிடையே கைலாஷ் யாத்திரைக்காக சென்ற தமிழகத்தை சேர்ந்த பக்தர்கள் நேபாளத்தில் சிமிகோட் என்ற பகுதியில் சிக்கி தவித்து வருகின்றனர்.

முன்னதாக சமிட் ஏர் நிறுவன ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் மீட்பு பணிகள் தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால் தற்போது வேலைநிறுத்தம் முடிவடைந்தும், மோசமான வானிலை காரணமாக விமான சேவை இல்லாததால் பக்தர்கள் அங்கு சிக்கி தவித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர்களை விரைந்து மீட்க வேண்டும் என அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள் கேட்டுக்கொண்டனர்.