பெண்களுக்கு எதிரான வன்கொடுமை நிறுத்தப்பட வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

395

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை நிறுத்தப்பட வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

ரஜினியின் மகளும், திரைப்பட இயக்குநர் உள்ளிட்ட பன்முகத்திறமைக் கொண்டவருமான ஐஸ்வர்யா தனுஷ், ஐ.நா. சபையின் பெண்கள் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து ரஜினிகாந்த் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் ஐஸ்வர்யா எப்போதும் தன்னுடைய சொந்த காலில் நிற்கும் அளவுக்கு தன்னம்பிக்கையும், ஆற்றலும் பெற்றவர் என்றும், பெண்கள் அமைப்பின் இந்திய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளது பெருமை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். பெண்களின் சம உரிமைக்காக நாம் அனைவரும் போராட வேண்டும் எனவும், பெண்களுக்கான வன்கொடுமைகள் நிறுத்தப்பட வேண்டும் எனவும் ரஜினி காந்த் குறிப்பிட்டுள்ளார்.