கத்தாரில் செயற்கையாக வடிவமைக்கப்பட்டுள்ள Pearl கத்தார் தீவின் விண்வெளி புகைப்படம் வெளியாகி உள்ளது ..!

1910

கத்தாரில் செயற்கையாக வடிவமைக்கப்பட்டுள்ள Pearl கத்தார் தீவின் விண்வெளி புகைப்படம் வெளியாகி பிரம்மிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரேபிய நாடுகளில் ஒன்றான கத்தார் கடல்பகுதியில் 1.5 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் செயற்கையான தனித்தீவு அமைக்கப்பட்டு வருகிறது. Pearl qatar என அழைக்கப்படும் என இந்த தீவு இரண்டு முத்து மணிகளை கோர்த்தது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டில் தொடங்கிய இதன் கட்டமைப்பு பணிகள் இந்த ஆண்டுகுள் நிறைவடையும் என கூறப்படுகிறது. இந்த பிரம்மாண்ட தீவில், 10 எல்லைகள், 31 கோபுர கட்டிடங்கள் மற்றும் 4 ஆயிரத்து 700 அடுக்குமாடி குடியிருப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சர்வதேச விண்வெளி ஆய்வு கூடத்தில் எடுக்கப்பட்ட Pearl கத்தாரின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. பைனாகுலர் போன்ற வடிவமைப்பில் காணப்படும் இந்த புகைப்படம் காண்பவர்களை பிரம்மிப்படைய செய்துள்ளது.