50 -க்கும் மேற்பட்ட மயில்கள் உயிரிழப்பு..!

596

மதுரை அருகே 50- க்கும் மேற்பட்ட மயில்கள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயில் நமது நாட்டின் தேசிய பறவையாகும். மதுரை அருகே மருதங்குளம் கண்மாய் பகுதிகளில் அதிகப்படியான மயில்கள் வசித்து வருகின்றனர். திடீரென நேற்று 50 க்கும் மேற்பட்ட மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கும், காவல் துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத் துறையினர் மயில்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அந்த கண்மாய் பகுதிகளில் நெல்லில் பூச்சிக்கொள்ளி மருந்தை கலந்து கொட்டப்பட்டுள்ளதாகவும், அதை சாப்பிட்ட பிறகே மயில்கள் இறந்து போனதாகவும் கூறப்படுகிறது. பிரேத பரிசோதனைக்கு பிறகே மயில்கள் உயிரிழந்ததற்கான காரணங்களை கூற முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.