பழனி முருகன் கோவில் சிலை முறைகேடு வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

1516

பழனி முருகன் கோவில் சிலை முறைகேடு வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பழனி மலைக்கோயிலில் அபிஷேக மூர்த்தி சிலை முறைகேடு தொடர்பாக சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் இரண்டாம் நாளாக நேற்று விசாரணை மேற்கொண்டனர். இதுதொடர்பாக ஸ்தபதி முத்தையா, முன்னாள் இணை ஆணையர் கே.கே. ராஜா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் பழனி வந்த போலீஸார், மலைக்கோயிலில் உள்ள சிவன், பார்வதி சிலைகள், நடராஜர், பரிவாரமூர்த்தி சிலைகளை ஆய்வு செய்தனர். கோவிலில் பல்வேறு நபர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், கோயில் உதவி ஆணையர் புகழேந்தி மற்றும் நகை சரிபார்ப்பாளர் தேவேந்திரன் ஆகியோர் சிலைகடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே, விசாரணை இன்று 3-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.