2011 உலக கோப்பை இறுதிப்போட்டி குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று ரணதுங்கா கூறியதற்கு இந்திய வீரர்கள் பதிலடி

337

2011 உலக கோப்பை இறுதிப்போட்டி குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று ரணதுங்கா கூறியதற்கு இந்திய வீரர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.
2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பையின் இறுதி போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. 6 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜூனா ரணதுங்கா புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளார். இந்திய அணியின் வெற்றி குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள கவுதம் காம்பீர், ரணதுங்காவின் கூற்று தன்னை வியக்க வைத்ததாகவும், உரிய ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுக்களை முன் வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இலங்கை அணி 1996 ஆம் ஆண்டு பெற்ற வெற்றி குறித்து கேள்வி எழுப்பினால் நன்றாக இருக்குமா? என்று வேகப்பந்து வீச்சாளர் நெஹ்ரா, பதிலடி கொடுத்துள்ளார்.