கரீபியன் கிரிக்கெட் லீக் தொடரில் விளையாடுகிறார் இர்பான் பதான்..!

182

இந்தியக் கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் முறையாக வேறு நாட்டு லீக் போட்டிகளில் விளையாடுவதற்கு ஆல்ரவுண்டர் இர்பான் பதான் தேர்வாகி புதிய வரலாறு படைத்துள்ளார்.

8 அணிகள் பங்கேற்கும் கரீபியன் கிரிக்கெட் லீக் போட்டித் தொடர் மேற்கிந்தியத்தீவுகளில் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறுகிறது. இதில் 20 நாடுகளைச் சேர்ந்த 536 வீரர்களின் வரைவுப்பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் இர்பான் பதான் பெயரும் இடம்பெற்றுள்ளது. முதல்முறையாக மேற்கிந்தியத்தீவுகளில் நடக்கும் கிரீபியன் கிரிக்கெட் லீக்கில் விளையாட இந்திய வீரர் இர்பான் பதான் தேர்வாகியுள்ளார். ஐபிஎல் போட்டியில் கடந்த இரு ஆண்டுகளாக விளையாடமல் இருந்த பதான் முதல்முறையாக வெளிநாட்டு லீக்கில் விளையாட உள்ளார். இதனிடையே, இதற்கு முன் எந்த இந்திய வீரரும் வேறுநாட்டு கிரிக்கெட் லீக் போட்டிகளில் விளையாடியதில்லை.