வெள்ளத்தால் உருக்குலைந்துள்ள கேரள மாநிலம்..!

434

வெள்ளத்தால் உருக்குலைந்துள்ள கேரளாவுக்கு 89 ஆயிரத்து 540 டன் உணவு தானியம், 100 டன் பருப்பு இலவசமாக வழங்கப்படும் என்று மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலம், 1 லட்சத்து 18 ஆயிரம் டன் உணவு தானியங்கள் வழங்குமாறு கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார். அதன்படி, 89 ஆயிரத்து 540 டன் உணவு தானியங்களும், 100 டன் பருப்புவகைகளும் கேரளாவுக்கு இலவசமாக வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்று பாஸ்வான் குறிப்பிட்டார். தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வராத மக்களுக்கும், உணவு பொருட்களை வினியோகிக்க வேண்டும் என்று கேரள அரசுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். தேவைப்பட்டால் மேலும் உதவ மத்திய அரசு தயாராக இருப்பதாகவும் ராம்விலாஸ் பாஸ்வான் கூறினார்.