நாடெங்கிலும் ஆறு மாதங்களுக்குள் பசு வதையைத் தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஹிமாசலப் பிரதேச உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

512

நாடெங்கிலும் ஆறு மாதங்களுக்குள் பசு வதையைத் தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஹிமாசலப் பிரதேச உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹிமாசலப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஹிந்து இயக்கம் ஒன்று உயர் நீதிமன்றத்தில் பசுவதை தடைசெய்ய வலியுறுத்தி வழக்கு தொடுத்திருந்தது. இதுதொடர்பான வழக்கு, ஹிமாசலப் பிரதேச உயர் நீதிமன்றத்தில், நீதிபதிகள் ராஜீவ் சர்மா, சுரேஷ்வர் தாக்குர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, பசுவதை விவகாரம் மாநில அரசுடன் சம்பந்தப்பட்டது என்றும், அதற்கு மாநில அரசுதான் தீர்வு காண வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்ததை அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். ஆனால், இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், பசு வதையைத் தடை செய்ய வேண்டும் என்றும், மாட்டிறைச்சி மற்றும் அது சார்ந்த பொருள்களை இறக்குமதி அல்லது ஏற்றுமதி செய்ய தடை விதிக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு, கடந்த ஆண்டு உத்தரவிட்டதை சுட்டிகாட்டினர். அந்த உத்தரவை செயல்படுத்தும் நடவடிக்கைகளை உடனடியாகத் தொடங்கி ஆறு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும், அதேவேளையில், இந்த ஆணையின் நகலை மத்திய சட்ட ஆணையத்தின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.