திட்டமிட்டபடி பிப்.1-ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் | தேர்தல் ஆணையத்திற்கு மத்திய அரசு பதில் மனு !

114

திட்டமிட்டபடி பிப்ரவரி ஒன்றாம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
கோவா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தல்கள் பிப்ரவரி 4-ஆம் தேதி தொடங்கி மார்ச் 8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தநிலையில், பிப்ரவரி ஒன்றாம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்த நிலையில், பட்ஜெட் தாக்கல் செய்யும் தேதியை மாற்ற வேண்டும் என எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்திருந்தன. இது தொடர்பாக மத்திய அரசு தனது நிலைப்பாட்டை விளக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இதற்காக மத்திய அரசு அனுப்பியுள்ள பதில் கடிதத்தில், “பட்ஜெட் தேதியை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை” எனத் தெரிவித்துள்ளது. அத்துடன் “திட்டமிட்டபடி மத்திய பட்ஜெட் பிப்ரவரி ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்படும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.