கருணாநிதி மறைவுக்கு மாநிலங்களவை மற்றும் மக்களவையில் துக்கம் அனுசரிப்பு…

205

கருணாநிதி மறைவுக்கு மாநிலங்களவை மற்றும் மக்களவையில் துக்கம் அனுசரிக்கப்பட்டது.

திமுக தலைவர் கருணாநிதி மறைவையடுத்து நேற்று மத்திய அரசு சார்பில் துக்கம் அனுசரிக்கப்பட்டது. அதன்படி, நாடாளுமன்றத்தில் எம்பிக்கள், கருணாநிதி இறப்பிற்கு எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர். மாநிலங்களவையில் வெங்கையா நாயுடு இரங்கல் அறிக்கை வாசித்தார். இதேபோல் மக்களவையில், சுமித்ரா மகாஜன் இரங்கல் அறிக்கை படித்தார். இதனை தொடர்ந்து இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. மேலும் தெலுங்கு தேசம் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தினர். தமிழக மக்களின் வாழ்வை முன்னிறுத்தி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியவர் என அவர்கள் பெருமிதம் தெரிவித்தனர்.