ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி தெலுங்கு தேச எம்பி-்க்கள் அமளி..!

406

தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரம் தொடர்பாக, மக்களவையில் எதிர்க்கட்சி எம்பி-க்கள் அமளியில் ஈடுபட்ட நிலையில், மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

மக்களவை இன்று கூடியதும், எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை வலிமைப்படுத்தும் சட்டத்திருத்த மசோதாவை உடனடியாக தாக்கல் செய்ய வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தினார். தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரம் தொடர்பாக, அசாமில் உள்ள வங்க தேச மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் எம்பி-க்கள் கோஷமிட்டனர். இதனிடையே, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி, தெலுங்கு தேச எம்பி-க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக, மக்களவையில் கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டது. இதனிடையே, மாநிலங்களவையில், அசாம் மாநில குடிமக்கள் பட்டியல் விவகாரம் தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக, பிரதமர் பதிலளிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்பி-க்கள் கோஷமிட்டதால், மாநிலங்களவை இன்று ஒத்திவைக்கப்பட்டது.