ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்துகோரி, நாடாளுமன்ற வளாகத்தில் தெலுங்கு தேசம் எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பாக திரண்ட தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காத மத்திய அரசைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரத்தில், அசாமில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். கைகளில் பதாகைகளுடன் தெலுங்கு தேச எம்பிக்கள் நடத்திய போராட்டத்தால், நாடாளுமன்ற வளாகத்தில் பரபரப்பு நிலவியது.