நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 9ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

181

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 9ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து முடிவு செய்ய, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் டெல்லியில் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் ஆனந்த் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 9ஆம் தேதி வரை நடைபெறும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 31ஆம் தேதி, தொடக்க நாளில் மக்களவை, மாநிலங்களவை அடங்கிய கூட்டுக்குழு கூட்டத்தில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உரையாற்றுகிறார். அதேநாளில், பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும். இதனையடுத்து, பிப்ரவரி 1ஆம் தேதி பொதுபட்ஜெட்டை நிதியமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்கிறார். இதில் நிதி சீர்திருத்தங்கள் பற்றிய முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம். வேளாண் துறைக்கு ஊக்கமளிக்கும் பல சலுகைகள் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

92 ஆண்டுகளுக்குப்பின், முதன்முறையாக ரயில்வே பட்ஜெட்டை இணைத்து பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால், 2017 பட்ஜெட் சரித்திர முக்கியத்துவம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.