சுதந்திர தின விழாவுக்கான அணிவகுப்பு ஒத்திகை..!

128

சென்னை கோட்டை கொத்தளத்தில், சுதந்திர தின விழாவுக்கான மூன்றாவது, கடைசி நாள் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.

நாட்டின் 72-வது சுதந்திர தினவிழா ஆகஸ்ட் 15ஆம் தேதி வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. சுதந்திர தின நாளில், சென்னை தலைமை செயலகத்தில் தேசியக் கொடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்றுகிறார். இந்த நிலையில், சென்னை ராஜாஜி சாலையில், கடந்த 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் முப்படையினரின் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது. கடைசி நாளாக இன்று, சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சியில், குதிரைப்படை, பெண்கள் கமாண்டோ பிரிவு, கடலோர காவல் பாதுகாப்பு குழு, கேரள மாநில ஆயுதப்படைக் குழு, சிறப்பு அதிரடிப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல்படை, தமிழ்நாடு பெண்கள் ஆயுதப்படை மற்றும் தேசிய மாணவர் படை போன்ற பிரிவுகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர்.