பாரா ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள், பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இந்தோனேஷியாவில் சமீபத்தில் நடைபெற்ற பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 15 தங்கம், 24 வெள்ளி, 33 வெண்கலம் என்று மொத்தம் 72 பதக்கங்கள் குவித்து அசத்தியது. இந்நிலையில் பதக்கம் வென்ற இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் பிரதமர் மோடியை டெல்லியில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். முன்னதாக நடைபெற்ற பாராட்டு விழாவில் தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்றவர்களுக்கு முறையே மத்திய அரசின் சார்பில் 30 லட்சம், 20 லட்சம், 10 லட்ச ரூபாய் வீதம் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது.