380

பீகார் மாநிலத்தில் பத்திரிகையாளர் ஒருவரை சுட்டுக்கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரின் அர்வால் மாவட்டத்தை சேர்ந்த பங்கஜ் மிஸ்ரா என்பவர் ராஷ்டிரிய சகாரா என்ற இந்தி பத்திரிகையில் பத்திரிகையாளராக பணியாற்றி வருகிறார். வங்கியில் இருந்து ஒரு லட்ச ரூபாயை எடுத்துக்கொண்டு, பங்கஜ் மிஸ்ரா வந்துகொண்டிருந்தபோது, துப்பாக்கியுடன் வந்த மர்மநபர்கள் இருவர் அவரை திடீரென சரமாரியாக சுட்டனர். இதில் படுகாயம் அடைந்து விழுந்த பங்கஜ் மிஸ்ராவிடம் இருந்து பணத்தை பறித்துக்கொண்டு மர்மநபர்கள் தப்பியோடிவிட்டனர். தகவல் அறிந்து சென்ற போலீசார், பங்கஜ் மிஸ்ராவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்நிலையில் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி சென்றவர்களில் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.