ஐதராபாத்தில் மூன்று கோடி மதிப்பிலான பஞ்சலோக சிலைகளை திருடிய இரண்டு பேர் கைது ..!

495

ஐதராபாத்தில் மூன்று கோடி மதிப்பிலான பஞ்சலோக சிலைகளை திருடிய இரண்டு பேரை கைது செய்து அம்மாநில போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள கோவில்களில் பழங்கால சிலைகள் திருடப்பட்ட சம்பவம் குறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில், பஞ்சலோக சிலைகளை திருடிவிட்டு தலைமறைவாக இருந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சுமார் மூன்று கோடி மதிப்பிலான பஞ்சலோக சிலைகளையும் அதிகாரிகள் கைப்பற்றினர். மீட்கப்பட்ட சிலைகள் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என காவல்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக் கடத்தலில் வெளிநாட்டு கும்பலுக்கு தொடர்பு இருப்பதாகவும், இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அம்மாநில காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.