கோவா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது.

282

உத்தர பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்திரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி பஞ்சாப் மற்றும் கோவா மாநிலங்களில் நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனையொட்டி, கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வந்த தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். கோவாவில் நான்கு முனை போட்டியும், பஞ்சாப்பில் 3 முனை போட்டியும் நிலவுகிறது. வாக்குப்பதிவையொட்டி இரண்டு மாநிலங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் வாக்களிப்பதற்கு வசதியாக பஞ்சாப்பில் 22 ஆயிரத்து 600 ஓட்டுச்சாவடிகளும், கோவாவில் ஆயிரத்து 642 சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து, வாக்குப்பதிவுக்கான இறுதிகட்ட ஏற்பாடுகள் இரு மாநிலங்களிலும் தீவிரமடைந்துள்ளது. நாளை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், மார்ச் 11 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுகிறது.