வரலாறு காணாத பனிப்பொழிவு ரயில், விமான சேவை முடக்கம். | மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு !

228

வடமாநிலங்களில் நிலவிவரும் கடும் பனிப்பொழிவு காரணமாக டெல்லியில் ரயில் மற்றும் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசம், டெல்லி, பீகார், உத்தரகாண்ட், இமாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு நீடித்து வருகிறது. இரண்டு மாதங்களுக்கு மேலாக நீடித்து வரும் பனிப்பொழிவு காரணமாக டெல்லியில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியுள்ளது. மோசமான பனிப்பொழிவு காரணமாக ரயில் மற்றும் விமான சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பனிப்பொழிவு காரணமாக, 34 ரயில்கள் தாமதமாக புறப்படும் எனவும், 6 ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வேத்துறை தெரிவித்துள்ளது. மேலும்,
இந்திரா காந்தி விமான நிலையத்தில் இருந்து 7 சர்வதேச விமானங்கள் மற்றும் 6 உள்நாட்டு விமானங்கள் தாமதமாக வந்து செல்லும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.