உலகின் மிகப்பெரிய பனிப்பாறை இரண்டாக உடைந்தது | கடல் மட்டம் உயரும் அபாயம் இருப்பதாக ஆய்வாளர்கள் தகவல்.

554

அண்டார்டிக்காவில், உலகின் மிகப்பெரிய பனிப்பாறைகளில் ஒன்று உடைந்து பிரிந்துள்ளதால், கடல் மட்டம் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.
உலகின் ஐந்தாவது மிகப்பெரிய கண்டமான அண்டார்டிக்கா பனிக்கட்டியினால் மூடப்பட்டுள்ளது. பூமியில் உள்ள நல்ல தண்ணீரில் சுமார் 70 சதவீதம் இந்த கண்டத்திலேயே உள்ளது. தற்போது புவி வெப்பமாதலினால் இங்குள்ள பனிப்பாறைகள் உருகி வருகின்றது. இதனால், கடல் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. இந்நிலையில், மேற்கு அண்டார்டிகாவில் அமைந்துள்ள லார்சன் சி பனியடுக்கு பகுதியில், மிகப்பெரிய பனிப்பாறை ஒன்று இரண்டாக உடைந்து பிரிந்துள்ளது. 5 ஆயிரம் சதுர கிலோமீட்டர் கொண்ட இந்த பனிப்பாறை, நாசா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மூலம் பிளவு ஏற்பட்டு இருப்பது உறுதியாகி உள்ளது. இந்த பனித் தகர்வால் பேராபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆராய்சியாளர்கள் கருதுகின்றனர்.