பணிச்சுமை காரணமாக மனமுடைந்த அரசு பேருந்து ஓட்டுநர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

284

பணிச்சுமை காரணமாக மனமுடைந்த அரசு பேருந்து ஓட்டுநர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் முத்துமுனியாண்டி. இவர் கடந்த 3 ஆண்டுகளாக கோவை அரசு பணிமனையில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் அதே பணிமனையில் கிளை மேலாளராக பணியாற்றி வரும் ஸ்ரீதர் என்பவர், முத்துமுனியாண்டிக்கு கூடுதல் பணிகளை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர், பணிமனையில் இருந்த அதிகாரிகளின் முன்னிலையில் பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை கண்ட சக ஓட்டுநர்கள் அவரை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்துத்துறை ஊழியர்களுக்கு கூடுதல் பணிச்சுமை வழங்குவதும், பழுதான பேருந்தை இயக்க சொல்வதும் தான், இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற காரணம் என போக்குவரத்து ஊழியர் சங்க பொதுச் செயலாளர் அருனகிரி குற்றம்சாட்டினார்.