தமிழக அமைச்சர் பாண்டியராஜன் முதலமைச்சர் பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார்.

245

தமிழக அமைச்சர் பாண்டியராஜன் முதலமைச்சர் பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார்.
தமிழக அமைச்சராக இருக்கும் பாண்டியராஜன் ஆவடி தொகுதியிலிருந்து சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் ஆவார். அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருந்த அவர், சட்டப்பேரவை உறுப்பினர்களை பாதுகாக்கும் பணியிலும் ஈடுபட்டு இருந்தார். இந்நிலையில், திடீர் திருப்பமாக யாரும் எதிர்பாரத வகையில் முதலமைச்சர் பன்னீர்செல்வம் அணிக்கு அவர் தாவியுள்ளார். முதலமைச்சர் இல்லம் சென்ற அவர் பன்னீர்செல்வத்தை நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.