தை ஒன்றாம் தேதிக்குள், ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்படும் : அமைச்சர் பாண்டியராஜன்

179

தை ஒன்றாம் தேதிக்குள், ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்படும் என்று அமைச்சர் பாண்டியராஜன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் பாளையம்கோட்டையில் நடைபெறும் 2-ம் ஆண்டு புத்தக திருவிழாவை அமைச்சர் பாண்டியராஜன் தொடங்கி வைத்தார். பின்னர் அரங்கில் வைக்கப்பட்ட பல்வேறு புத்தகங்களை அவர் பார்வையிட்டார்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த பாண்டியராஜன், தமிழகத்தில் நடத்தப்பட்ட 39 அகழ்வாராய்ச்சியில், அழகன்குளத்தில் தான் அதிகமாக கண்டுபிடிப்புகள் கிடைக்க பெற்றுள்ளதாக தெரிவித்தார். அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்ட இடங்களை, கல்வி கூடங்களாக உருமாற்றப்படும் என்று அவர் குறிப்பிட்டார். கொசஸ்தலை ஆறு கழிமுகம் முதல் தாமிரபரணி கழிமுகம் வரையிலும் அகழ்வாராய்ச்சிகள் நடத்தப்படும் என்று கூறிய பாண்டியராஜன், வரும் தை மாதம் முதல் தேதிக்குள் அமெரிக்காவில் உள்ள ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில், தமிழ் இருக்கை அமைக்கும் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.