பான்கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது.

273

பான்கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது.
வருமான வரி செலுத்துவதற்கும், பான்கார்டு பெறுவதற்கும் ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு அண்மையில் உத்தரவிட்டது. இதற்கான கடைசி தேதி ஜூன் 30 ஆம் தேதி என்றும் வருமானவரித்துறை தெரிவித்திருந்தது. வருமான வரிச்செலுத்துவதில் ஏற்படும் முறைகேடுகளை தவிர்க்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் மத்திய அரசு விளக்கம் அளித்திருந்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் மத்திய அரசின் உத்தரவுக்கு நீதிபதிகள்
இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டனர். மேலும், வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆணையிட்டனர்.