பணத்தட்டுப்பாட்டை போக்கும் விதமாக ரெயில்வே ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் சம்பள முன்தொகையாக இன்று வழங்கப்படுகிறது.

338

பணத்தட்டுப்பாட்டை போக்கும் விதமாக ரெயில்வே ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் சம்பள முன்தொகையாக இன்று வழங்கப்படுகிறது.
பிரதமர் மோடி கடந்த 8-ந் தேதி 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதையடுத்து நாடு முழுவதும் அனைத்து தரப்பு மக்களும் பணத்தட்டுப்பாடு காரணமாக கடும் அவதிக்குள்ளாகினர். மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள பண தட்டுப்பாடை போக்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து, நவம்பர் மற்றும் டிசம்பர் மாத சம்பளத்திலிருந்து 10 ஆயிரம் ரூபாய் முன்பணமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. இதன்படி ரெயில்வே குருப்-சி ஊழியர்களுக்கு சம்பள முன்பணமாக 10 ஆயிரம் ரூபாய் இன்று வழங்கப்படுகிறது. சென்னை கோட்டத்தில் உள்ள ரெயில்வே ஊழியர்களுக்கு பணம் வழங்குவதற்காக ரிசர்வ் வங்கிகளிலிருந்து ரூபாய் 10 கோடி கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.