பனாமா லீக்ஸ் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் விசாரணைக்கு ஆஜரானார்.

301

பனாமா லீக்ஸ் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் விசாரணைக்கு ஆஜரானார்.
பனாமா நாட்டின் மொசாக் பொன்சேகா சட்ட நிறுவனத்தின் உதவியுடன், பல்வேறு நாடுகளின் முக்கிய பிரமுகர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் சட்ட விரோதமாக முதலீடு செய்துள்ளனர். இது தொடர்பான ஆவணங்கள், பனாமா பேப்பர்ஸ் என்ற பெயரில் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் லண்டனில் சட்டவிரோதமாக சொத்து வாங்கியிருந்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து நவாஸ் ஷெரீபை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவர் இம்ரான் கான் உள்ளிட்ட சிலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். மேலும் நவாஸ் ஷெரீப்பை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இந்நிலையில், பனாமா லீக்ஸ் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் அமைத்த கூட்டு புலனாய்வுக்குழு முன்பு பிரதமர் நவாஸ் ஷெரீப் இன்று விசாரணைக்கு ஆஜரானார்