ஆசிரியர் தகுதித்தேர்வு அறிவித்த தேதியில் நடத்தப்படும் : பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்

164

ஆசிரியர் தகுதித்தேர்வு அறிவித்த தேதியில் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தின் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். ஆசிரியர் தகுதித்தேர்வால் 7 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் தவறானது என கூறிய அவர், ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவித்த தேதியில் நடத்தப்படும் என திட்டவட்டமாக தெரிவித்தார்.